நடிகர் விஜய்யின் காருக்கு அபராதம்.! போக்குவரத்து போலீசார் அறிவிப்பு.!
traffic police fine to actor vijay car
நடிகர் விஜய் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை அடிப்படையாக வைத்து போக்குவரத்து போலீசார் மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த 20-ந்தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது, அவர் பயன்படுத்திய காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக சமூக வலைதளத்தில் ஒருவர் சென்னை போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்ததாவது, விஐபிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு இதுபோன்ற விலக்கு ஏதும் அளிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு அபராதம் விதிக்க முடியாதா? என்ற கேட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் விஜய்யின் காருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
English Summary
traffic police fine to actor vijay car