சென்னையில் நேற்று ஒரே நாளில் 3,926 பேர் மீது வழக்கு.. காவல்துறை அதிரடி.!!
traffic police 3926 case in chennai
சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவு, போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை தொடர்ந்து நடத்தி விதிகளை மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையில் நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணிவதற்காக 1103 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மீதும், 2,023 பேர் பின்னிருக்கையில் பயணித்த பயணிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகன ஓட்டிகள் ஹெல்மெட் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கையில் பயணிக்கும் பயணிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
English Summary
traffic police 3926 case in chennai