சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்..மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!
Trade union members protest in Chennai a roar against the central government
மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிசி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.மாவட்டங்கள் தோறும் போராட்டம் செய்துவருகின்றனர்.இந்தப்போராட்டத்துக்கு அதிமுக தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிக்கவிலைல.
இந்த நிலையில் சென்னை பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர், நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் வழக்கம்போல் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trade union members protest in Chennai a roar against the central government