அடக்கடவுளே! டிராக்டர் மோதி விபத்து! காரணமான சிறுவனையும் தந்தையையும் கைது செய்த காவலர்கள்...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி ராமர் கோவில் பேருந்து நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த 78 வயதான காளியப்பன் என்பவர். சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்த 47 வயதான குமார் என்பவர். இவர்கள் இருவரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவேயுள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.

அச்சமயம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் அங்கு டிராக்டரை ஓட்டி வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன் மற்றும் குமார் ஆகியோர் மீது கடுமையாக மோதியது.இவ்விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இதில் குமாருக்கு இடது கால் முறிந்து படுகாயம் அடைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் டிராக்டர் மோதி இறந்த காளியப்பன் சாவிற்கு காரணமான சிறுவனை கைது செய்ய கோரி அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் காளியப்பனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் காவலர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விபத்திற்கு காரணமான சிறுவன், சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tractor hit and killed police arrested boy and his father who were responsible


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->