அது மிஷாவோட இரத்தம்.. சிறைக்கு அஞ்சுவரா?.. டி.ஆர். பாலு பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செல்ல திட்டமிட்டு இருந்தார். தனது முதல் தேர்தல் பரப்புரையை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து துவங்க திட்டமிட்டு இருந்த நிலையில், காவல்துறையினரால் கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது வரை 3 ஆவது முறை உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு, " தமிழக அரசு வேண்டும் என்றே உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை தடுத்து வருகிறது. சிறை எங்களுக்கு பெரிய விஷயம் கிடையாது. எங்களின் தலைவர் மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். இரத்தம் சொட்ட சொட்ட மு.க ஸ்டாலின் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

அவரின் வழிவந்த இரத்தம் உதயநிதி ஸ்டாலின் சிறைக்கு செல்வது பெரிதான விஷயம் கிடையாது. ஆனால், எங்களுக்கு கோபம் ஏற்படுகிறது. பாஜக வேல் யாத்திரை நடத்தும் போது, தமிழக அரசு என்ன செய்துகொண்டு இருந்தது. காவல்துறையினரை ஏவி திமுகவின் வளர்ச்சியை அதிமுக தடுத்து வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TR Balu Pressmeet about Udhayanidhi Stalin Arrest 22 November 2020


கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?Advertisement

கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?
Seithipunal