சுற்றுலா பயணிகளே உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ்!...உடனே இதை தெரிஞ்சுக்கோங்க! - Seithipunal
Seithipunal



மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் சீசன் முடிந்த நிலையிலும் அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், கடந்த  10-ம் தேதி திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி பகுதியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக  ஐந்தருவியில் மிதமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிகாமாக தடை விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், ஐந்தருவியை தொடர்ந்து மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை விதிக்கப்பட்டது.  இந்நிலைகளில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழத்தொடங்கியுள்ளதால்,சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists this is the good news for you Know this now Tourists this is the good news for you Know this now


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->