உல்லாசத்தில் சுற்றுலா பயணிகள்!...திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பேங்காக்கிற்கு திருச்சியில் இருந்து நேரடியாக செல்லும் புதிய விமான சேவையை நேற்று முதல் தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து துவங்கியுள்ளது.

இந்த சேவை வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பேங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம், மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பேங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று இரவு பேங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 46 பயணிகள் வந்ததை தொடர்ந்து, மீண்டும் திருச்சியில் இருந்து பேங்காக் புறப்பட்ட விமானத்தில் 176  பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists on a merry go round Direct flight from Trichy to Bangkok begins


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->