குஷியில் சுற்றுலா பயணிகள்! 7000 கன அடியாக அதிகரித்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக, கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு, அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமான நிலையில் இருந்து வருகிறது.

இதில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6000 கனஅடியாக இருந்தது.இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி நில வரப்படி நீர்வரத்து 7000 கன அடியாக தண்ணீர் அதிகரித்தது.

இதனால் சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists in awe Dharmapuri Hogenakkal water inflow increased to 7000 cubic feet


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->