சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! 6000 கன அடியாக அதிகரித்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...!
Tourists are happy Dharmapuri Hogenakkal water flow has increased to 6000 cubic feet
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

மேலும், தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான நாட்றாம்பாளையம், கேரட்டி,அஞ்செட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 5000 கனஅடியாகவும், நேற்று 3000 கனஅடியாகவும் வந்தது.
இந்நிலையில், கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு சுமார் 6000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இதனைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து தங்களது சுற்றுலா நாளை களித்தனர்.
English Summary
Tourists are happy Dharmapuri Hogenakkal water flow has increased to 6000 cubic feet