கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.. வனத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சரியான பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists allowed to bathe in Kumbakkarai Falls


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->