நேருக்கு நேர் மோதிக்கொண்ட சுற்றுலா வேன்கள்: வடமாநில பக்தர்கள் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் வந்து சுவாமி தரிசனம் செய்து என்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். 

பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி செல்ல திட்டமிட்டு 2 சுற்றுலா வேன்களில் பயணிகள் இன்று காலை புறப்பட்டு சென்றனர். தனுஷ்கோடி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டது. 

இதில் ஒரு வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. மற்றொரு வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 வட மாநில பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். 

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourist vans collided Northern peoples death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->