நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?  - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 

இதனால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 4 மாவட்டங்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் மழை பாதிப்பு எதிரொலியால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், செங்கல்பட்டு உள்பட 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெள்ள பாதிப்பு காரணமாக திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 தாலுகாகளின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tomorrow which districts schools and colleges holiday 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->