நாளை நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் – பஸ்கள், ஆட்டோக்கள் இயங்குமா?
Tomorrow there will be a general strike across the country will the buses and auto rickshaws operate?
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நாளை (ஜூலை 9) நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல்,குறைந்தபட்ச ஊதிய உயர்வு,பொதுத்துறைகளை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு,புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடல்,ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தரம்,வேலைவாய்ப்புச் சாத்தியங்கள் உருவாக்கல்,தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெறல், என மொத்தமாக 17 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முக்கிய தொழிற்சங்கங்கள்:தொ.மு.ச.(தி.மு.க.தொழிற்சங்கம்)சி.ஐ.டி.யு(மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்)ஏ.ஐ.டி.யூ.சி. (இந்திய கம்யூனிஸ்ட்)தமிழ்நாட்டில் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.மேலும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் தொழிற்சங்கங்கள்மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.
தொ.மு.ச. பங்கேற்பதால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படமாட்டாது.அ.தி.மு.க.-வின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை என்பதால், சில பஸ்கள் இயங்க வாய்ப்பு உள்ளது.
சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் பெரும்பாலான பகுதிகளில் உள்ளதால், பல்வேறு இடங்களில் ஆட்டோக்கள் இயங்காமல் இருக்கலாம்.வணிகர் சங்கங்கள் இதுவரை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, கடைகள் வழக்கம்போல் இயங்கும்.
வங்கி மற்றும் காப்பீட்டு துறைகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளன.
விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைகின்றனர்.25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tomorrow there will be a general strike across the country will the buses and auto rickshaws operate?