ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை...! 
                                    
                                    
                                   tomarrow local holiday to ramanathapuram district 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் பொது விடுமுறை மற்றும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் முக்கிய தினங்களில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
"ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் மகாகும்பாவிஷேகம் விழா நாளை  நடைபெறுவதால் அன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் "உள்ளூர் விடுமுறை" ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு மே 10ம் தேதி வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், நாளை ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
                                     
                                 
                   
                       English Summary
                       tomarrow local holiday to ramanathapuram district