அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை.. மகிழ்ச்சியில் இல்லதரசிகள்.! - Seithipunal
Seithipunal


ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்கெட்டாக கருதப்படும் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் தமிழ்நாடு முழுவது உள்ள காய்கறி சந்தைகளில்  அவ்வப்போது மக்கள் பிரதானமாக உபயோகம் செய்யும் பொருட்களின் விலை திடீர் உச்சத்தை காணுவது வாடிக்கையாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெங்காயத்தின் விலை அதிர்ச்சியுறும் வகையில் உயர்ந்த நிலையில், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட வெங்காயங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாட்டு தக்காளி கிலோ ரூ.25 மற்றும் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக விலை உச்சமடைந்து கிலோ தக்காளி ரூ.150 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இதனால் இல்லத்தரசிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்த மழை காரணமாக தக்காளி செடிகள் சேதமாகி உற்பத்தி குறைந்ததால் விளைவாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ரூ. 80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 40 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today tomato price for rs 40


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->