தமிழகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் - முக்கியத் திட்டங்கள் அறிவிப்பு.!
today tamilnadu government budget submit
இன்று காலை பத்து மணிக்கு தமிழக சட்டசபை ஆரம்பமாக உள்ளது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடப்பு ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பொது பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் அதில் இடம் பெற்றிருக்கும்

இந்த பட்ஜெட் உரையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் இரண்டு மணி நேரம் வாசிக்க உள்ளார். மேலும், சட்டசபை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.
இந்த ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.
English Summary
today tamilnadu government budget submit