தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. பயிர் காப்பீடு.. இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா, தாளடி, பிசான நெற்பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாளாகும்.

நடப்பு 2022-2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை சம்பா, தாளடி, பிசான நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன்பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் உரிய ஆவணங்களுடன்  நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் , மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு  ஆகிய மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு இன்றே (நவம்பர் 15ஆம் தேதி) கடைசி நாளாகும்.

மேலும், கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் https://pmfby.gov.in என்ற இணையதளத்தில் 'விவசாயிகள் கார்னர்' என்ற பக்கத்தில் நேரடியாக காப்பீடு செய்து கொள்ள முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today is the last day to apply for crop insurance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->