தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூர சம்பவம்.. இன்று 4-ம் ஆண்டு நினைவு தினம்.!
Today is the 4th anniversary of the Thoothukudi gun shooting
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய தினம் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமர்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Today is the 4th anniversary of the Thoothukudi gun shooting