இன்று ஆஜராகுவாரா விஜயலட்சுமி? - நடக்கப்போவது என்ன?
today hearing seeman vijayalakshmi case
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரை கடந்த 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோடீஸுக்கு அவர் எந்த பதிலும் அளிக்காமலும், நீதிமன்றத்தில் ஆஜராகவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, விஜயலட்சுமி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்குவதாகக் கூறி, விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார். அதன் படி நடிகை விஜயலட்சுமி இன்று நேரிலோ அல்லது காணொலி காட்சி வாயிலாகவோ நீதிபதி முன்பு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
today hearing seeman vijayalakshmi case