இ பாஸ் நடைமுறை குறித்த மறு ஆய்வு மனு - இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகள், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா தலமான ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டுள்ளது.

இந்த இ-பாஸ் நடைமுறையால், சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஊட்டியில் வணிகர்கள் சங்கம் சார்பில் கடந்த 2-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்தப் போராட்டத்தால், அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறை குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம். தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today hearing e pass procedure review petition


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->