ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
today gold rate 15 10 2025
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமடைந்து வருவது இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் திருமணம், விழா போன்ற சுபநிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம் ரூ.11,580-க்கும், ஒரு சவரன் ரூ.92,640-க்கும் விற்பனையாகியது. ஆனால் நேற்று திடீரென ரூ.245 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,825-ஆகவும், ரூ.1,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,600-ஆகவும் விற்பனையானது.
தங்கத்தின் விலையேற்றத்துடன் வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.197-க்கும், ஒரு கிலோ ரூ.1,97,000-க்கும் விற்பனையாகி இருந்தது.
ஆனால் நேற்று அது ரூ.9 உயர்ந்து கிராமுக்கு ரூ.206-ஆகவும், கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து ரூ.2,06,000-ஆகவும் விற்பனையானது. இதனால் வெள்ளியும் முதல்முறையாக கிலோவுக்கு ரூ.2 லட்சத்தைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,860-ஆகவும், ஒரு சவரன் ரூ.94,880-ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் 1 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு ரூ.207-ஆகவும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ரூ.2,07,000-ஆகவும் விற்பனையாகிறது.
English Summary
today gold rate 15 10 2025