மயிலாடுதுறையில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்..! முழு விவரம் இதோ...! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இன்று வேலைவாய்ப்பு முகாம் கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. 

கல்வி தகுதி:

•5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, 

•டிப்ளமோ, 

•ஐ.டி.ஐ. மற்றும்

•பட்டப்படிப்பு படித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது சுயவிபர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார்கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, முன்அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். 

•மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். 

•கூடுதல் விபரங்களுக்கு 9499055904, 9750975354 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today employment camp in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->