வரலாறு நினைவுக்கூறும் சாதனையாளர்கள்... வரலாற்றில் இன்றைய தினம்..!! - Seithipunal
Seithipunal


எம்.ஜி.ராமச்சந்திரன்

 புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

 இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

 சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

1960ஆம் ஆண்டு இவர் 'பத்மஸ்ரீ விருதுக்காக" தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.


பெஞ்சமின் பிராங்கிளின்

 ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார்.

இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளார். 

 மின்சாரம் பற்றியும், இடி மற்றும் மின்னல் பற்றியும், புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் மற்றும் பல கருவிகளையும் கண்டுபிடித்தார்.

அறிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிராங்கிளின் 1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

 1991ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வளைகுடாப் போர் ஆரம்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Dr MGR birthday


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->