திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழிதேரோட்டம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.

சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழும் திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த  கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

96 அடி உயரத்தில் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் மொத்த எடை 300 டன் ஆகும். இன்று காலை 8.10 மணிக்கு தேரோட்டம் வடம் பிடிக்கப்பட்டு தொடங்கப்படுகிறது. நான்கு மாட வீதிகளிலும் ஆடி அசைந்து வரும் தேரை காண பல்லாயிர கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், மேலும் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவ வாகனம் ஆகிவவை தயார் நிலையில் இருப்பதாகவும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Aazhi Therottam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->