அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் பெருங்களத்தூர் வழியாக மதுரவாயல் சுங்கச்சாவடியை கடந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடையும்.

அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக குரோம்பேட்டை, வடபழனி கடந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடையும்.

அதேபோன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாகச் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி, மதுரவாயிலை கடந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடையும். இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த ஷெட்டுக்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர்கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNSTC orders all buses to run through Tambaram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->