குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்..ஒரு பணியிடத்துக்கு 300 பேர் போட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்திருந்தார். மேலும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30ஆம் தேதி முதல் நேற்றுடன் முடிவடைந்தது.

மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 80 இடங்கள் விளையாட்டு கோட்டம் மூலம் நிரப்பப்படும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும்.

இந்த ஆண்டு க்ரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. க்ரூப் 4 தேர்வின் வழியாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்காக 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டி என்ற விகிதத்தில் இது உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 4 exam 21 lakhs members apply


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->