திருப்போரூரில் பரபரப்பு.. சோதனையில் சிக்கிய துப்பாக்கிகள்.. 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!
TNpolice arrested 3 people with Gun and bullets near tirupporur
செங்கல்பட்டு மாவட்டம் இள்ளலூர் பகுதியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி என்பவர் தமக்கு சொந்தமான இடத்தில் இருந்த மூன்று டன் எடையுள்ள இரும்பு காணாமல் போனதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி பிடித்த போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் மேற்கொண்ட சோதனையில் காரில் இரண்டு ஸ்னைப்பர் வகை துப்பாக்கிகள், கிலோ கணக்கிலான தோட்டாக்கள் மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த மூன்று பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மேலும் எட்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் எதற்காக வந்தனர், துப்பாக்கியை வேட்டைக்காக பயன்படுத்தியுள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்று கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
TNpolice arrested 3 people with Gun and bullets near tirupporur