இரவு முதல் பஸ் ஸ்ட்ரைக்..? பேச்சு வார்த்தை தொடக்கம்.!! வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பொங்கலுக்கு முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த போராட்டத்தால் தமிழக முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதில் சில பகுதிகளில் விபத்துகளும் அரங்கேறின. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை தொடரப்பட்ட வழக்கின் போது இன்று (ஜனவரி 19)அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தை இன்று நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கலந்து கொள்ளும் இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,போக்குவரத்து துறை செயலாளர் பணிந்தர ரெட்டி, போக்குவரத்து கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்படாவிட்டால் இன்று இரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt started negotiation with tnstc workers union


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->