ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு || அதிகாரிகளுக்கு "பதவி உயர்வு வழங்கி" பாதுகாக்கிறாதா தமிழக அரசு? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து  புலனாய்வு அறிக்கை மற்றும் தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்க்கு தமிழக அரசு தரப்பில் நீதி மன்றத்தில் தாக்கல் அறிக்கையில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்று கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வி.வெங்கடேஷ், தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்பியாக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது என விலளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 

அதற்க்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல் துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா? அல்லது ஓய்வு பெற்று விட்டார்களா? என்பது தெரியவில்லை. அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள காவல் துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ், ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் பிரச்சினை ஏற்பட்டபோது, அதனை திறமையாக கையாண்டு நீதிமன்றம் சுமுகமாக செயல்பட செய்தவர். அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுக்குளுக்க ஆளானார்? என்று கேள்வி எழுப்பினர்.  

தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குற்றவாளிகளை தமிழக அரசு பாதுகாக்கிறதா? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். இதற்க்கு கரணம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சைலேஷ்குமார் யாதவ் கூடுதல் டி.ஜி.பி பதவியில் இருந்து டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நபருக்கு பதவி உயர்வு வழங்கி கௌரவிக்கிறதோ? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு குற்றவாளிககளை ஆட்சிக்கு வந்ததும் தண்டிக்கப்படுவார்கள் என கூறிய ஸ்டாலின் தற்போது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது துரதிஷ்டமானது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt promote Sterlite shoot out accused


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->