போக்குவரத்து துறையில் ஆட்குறைப்பா? அதிர்ச்சியில் ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தி உள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் "போக்குவரத்து துறையில் ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளாமல், பணியாளர்களை நேரில் சந்தித்து கருத்துக்களை பெறாமல் போக்குவரத்து துறையை தொழில்நுட்பத் துறையாக்கி தொழில்நுட்பம் அறியாத பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து தொழில்நுட்ப பணியாளர்களை எண்ணிக்கை அதிகரிப்பது என்பது இயற்கை நீதியின் பார்வையில் நியாயம் இல்லை. 

ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான அலுவலர்களை கொண்ட குழு போக்குவரத்துத் துறையை ஆய்வு செய்து இது தொடர்பான முடிவு எடுக்க வேண்டும். போக்குவரத்து துறையில் அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், ஓட்டுநர்கள், பதிவறை எழுத்தர் ,தட்டச்சர் உள்ளிட்ட அனைத்து நிலை அரசு பணியாளர்களின் காலிப்பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், பதவி உயர்வு மூலம், தேர்வாணைய குழு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். 

போக்குவரத்து துறை அரசு பணியாளர்களுக்கு வாகனங்களை சோதனை செய்யும் பொறுப்பு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 14 இணை துணை போக்குவரத்து ஆணையர் பணியிடங்கள் அவசியமற்றதாக கருதி ரத்து செய்ய வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். போக்குவரத்து துறையில் தகவல் தொழில்நுட்பம் அறியாத பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt planning to reduce workers in transport Dept


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->