#சற்றுமுன் | தமிழக அரசு பிறப்பித்த அரசாணை.! சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது.! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில், சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் சேவையை பெறுவதற்காக சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடி செலவில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பினை 45ல் இருந்து 60 ஆக நீட்டித்து ரூ.1.48 கோடி செலவில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 2100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக முதற்கட்டமாக, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் 75 பேர் பயன்பெறும் வகையில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, தகுதியான பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து ஆவின் பாலகம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

இதில் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்று ஒரு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Order For Handicap Road Side Shop


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->