உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிந்த தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


கோவை அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்ததற்காக பணியில் இருந்த ஊழியர்களின் ஓய்வூதிய பலனை தமிழக அரசு நிறுத்தி வைத்து இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் காலாவதியான மருந்துகள் தடுப்பது குறித்தான அறிக்கையினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் மருந்து உற்பத்தி முதல் விநியோகம் செய்யப்படும் வரை பல்வேறு நடைமுறைகளை பின்பற்றப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளின் மீது விற்பனைக்கு அல்ல என அச்சிடப்படுவதால் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் உபயோகத்தை தடுக்க பறக்கும் படை அமைத்த திடீர் சோதனை நடத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 9ம் தேதி அதிரடி ஒரு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் எலி காய்ச்சல் நோயை பரிசோதிக்கும் ஆய்வகத்தை திறந்து வைத்து நேற்று செய்தியாளரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். 

அப்போதா அவர் "தமிழகத்தில் காலாவதியான மருந்துகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி காலாவதியான மருந்துகளை கண்டறிய மாவட்டம் தோறும் கமிட்டி அமைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNgovt obeyed the High Court order for medical flying squad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->