விக்ரவாண்டி இடைத்தேர்தல் எப்போது? வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


விக்ரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம், இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. 

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே தேதியில் நடத்த வாய்ப்பு குறைவு.

ஆனால் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதால் அவற்றில் ஏதேனும் ஒரு கட்ட தேர்தலில் விக்ரவாண்டி தொகுதிக்கான இடை தேர்தலும் நடத்த வாய்ப்புள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விக்ரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt inform to ECI vikravandi mla seat in vacant


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->