தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்! முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் அறிமுகம்!
TNGovt announce New School Students scheme
முதலமைச்சர் முன்னிலையில் சென்னை ஐஐடி - பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஊரகப் பகுதிகளில் கல்வி பயிலும் ஒரு இலட்சம் அரசுப் பள்ளி மாணவ -மாணவிகளை மின்னணு அறிவியலுடன் இணைக்கும் முயற்சியே அனைவருக்கும் ஐஐடி திட்டம் பயனுள்ளதாக அமைய உள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இத்திட்டதின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 1000 பேருக்கு, அவர்கள் 12ம் வகுப்பு நிறைவு செய்தவுடன் மாதம் ரூ.1000 வழங்கப்படும்!
தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும்.
அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும்.
English Summary
TNGovt announce New School Students scheme