தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? மின்சார வாரியம் சொன்ன முக்கிய தகவல்! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்ததையடுத்து, மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. 

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அப்போது மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியானது. மின் கட்டணத்தை உயர்த்தி 10 மாதங்கள் கூட முடியாத நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மின் கட்டண உயர்வு நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB New Announce for Current Bill Hike issue 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->