தைப்பூச விழாவுக்கு மின் தடையா? - மின்சாரத்துறை அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் முருகனின் சிறப்பை போற்றும் தைப்பூசத் திருநாள் நாளை உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களும், குறிப்பாக தமிழர்களும் தைப்பூசத் திருநாளை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள முருகர் கோவில்களிலும் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தைப்பூச நாளை அரசு விடுமுறை நாளாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

அதைத் தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த ஆண்டும் தைப்பூச நாள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மின்சாரத்துறை சார்பில் ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தைப்பூச திருவிழா நடைபெறும் இடங்களில்காரணமின்றி மின்தடை ஏற்படுத்தக் கூடாது என தமிழ்நாடு மின் நுகர்வோர் மற்றும் பகிர்மான கழகத்திற்கு தமிழ்நாடு மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tneb dept order Do not cause power cut Thaipusam festival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->