#தமிழகபட்ஜெட்2023 | அசத்தாலான பட்ஜெட் அறிவிப்புகள்!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கி உள்ளார்.  அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்கவில்லை என்று, அதிமுக எம்எல்ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து,

"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் 
உடையானாம் வேந்தர்க் கொளி"
என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் அறிவிப்பில் சில :

* தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
* அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
* உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைக்கப்படும்.
* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கான கருணைத்தொகை ரூ. 40 லட்சமாக உயர்வு.
* வரும் நிதி ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்"பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு"
* 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்"
* இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
* ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு.


* மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் 
* சங்கமம் கலை விழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும் 
* 25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் 
* வயது முதிர்ந்த மேலும் 591 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் 
* இலங்கை தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட 223 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 
* தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் 
* ஸ்டான்லி அரசும் மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவ பிரிவு புதிதாக அமைக்கப்படும் 
* கிண்டிகள் கருணாநிதி பெயரிலான மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் 
* தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இரண்டு மடங்காக, 40 லட்சம் உயர்த்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNBudget2023 10 am


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->