தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிக்கு ஆப்பு வைத்த மர்ம நபர்கள்!  
                                    
                                    
                                   TNBJP Narayanan Thirupathy X Account hacked 
 
                                 
                               
                                
                                      
                                            அண்மை காலமாக உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்களின் சமூகவலைத்தள பக்கங்கள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு வருவது சாமானியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிஜிட்டல் உலகில் இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் வடியானது தான். நம் இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.
மேலும் உலக நாடுகளின் பல்வேறு அரசுகள் இந்த ஹேக்கர்களிடம் சிக்கி, செய்வதறியாது முழித்த கதையெல்லாம் நடந்தது உண்டு.
இன்று தங்களின் அதிகாரபூர்வ செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க பிரபலங்கள் பயன்படும் டிவிட்டர் பக்கங்களும் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு வருவது சாமானியர்களையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் திரைபிரபலன்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இப்படி பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
 இந்த நிலையில், பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியின் 'எக்ஸ்' சமூகவலைத்தள பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இதனை அவரே வேறு ஒரு புது ஐ.டி-யிலிருந்து தெரிவித்துள்ளார். மேலும் தனது முடங்கிய பக்கத்தை மீட்பதற்கு உண்டான முயற்சிகளையும் செய்துவருவதாக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 
                                     
                                 
                   
                       English Summary
                       TNBJP Narayanan Thirupathy X Account hacked