"விநாயகர் சதுர்த்தி சிறப்புத் தணிக்கை": விதிமீறிய 1,169 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - ₹59 லட்சம் அபராதம் வசூல்! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி பண்டிகைக் காலத்தையொட்டிப் பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிர வாகனத் தணிக்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுச் சென்னையிலிருந்து சுமார் 3,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதிகக் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (RTO) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (MVI) அடங்கிய குழுக்கள் மூலம் கடந்த 5 நாட்களாகச் சிறப்புத் தணிக்கை நடத்தப்பட்டது.

1,169 பேருந்துகளுக்கு ஈ-சலான்: இந்த அய்ந்து நாள் ஆய்வில் விதிமீறல்களில் ஈடுபட்ட 1,169 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு, தணிக்கை அறிக்கைகளுடன் ஈ-சலான் (E-Challan) வழங்கப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.59 லட்சம் வசூல்: இதில் இணக்கக் கட்டணமாக ₹24.44 லட்சமும், உடனடி அபராதமாக ₹5.40 லட்சமும் வசூலிக்கப்பட்டது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுத் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளிலிருந்து செலுத்தப்பட வேண்டிய வரியாக ₹53.62 லட்சம் பெறப்பட்டது. இதன்மூலம் மொத்தம் ₹59,02,074/- வரி மற்றும் அபராதமாகச் சேகரிக்கப்பட்டுள்ளது.

11 பேருந்துகள் மீது நேரடி நடவடிக்கை & 6 பேருந்துகள் சிறைபிடிப்பு: அதிகக் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தகுதிச்சான்று (FC) புதுப்பிக்கப்படாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் உடனடியாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

பயணச்சீட்டு ரத்து விதிகளுக்கு எச்சரிக்கை: ஆன்லைன் மூலம் பதிவு செய்த பயணச்சீட்டை ஓட்டுநரோ அல்லது உரிமையாளரோ ரத்து செய்யும் பட்சத்தில், அப்பயணிகளுக்கு மாற்றுப் பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பேருந்தின் அனுமதிச்சான்று (Permit) ரத்து செய்யப்படும் எனப் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

40 சிறப்புத் தணிக்கைக் குழுக்கள் & புகார் எண்கள்: மாநிலம் முழுவதும் 40 சிறப்புத் தணிக்கைக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பயணிகள் அதிகக் கட்டணம் குறித்த புகார்களைத் தெரிவிக்க 9384808333 என்ற கைபேசி எண்ணையோ அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Transport Dept Cracks Down on Omni Bus Overcharging During Vinayagar Chaturthi 59 Lakhs Collected in Fines and Taxes


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->