தமிழக சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு திடீர் நிறுத்தம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணம் மாற்றியமைப்பது வழக்கமான ஒன்று. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரியலூர் மணகெதி, திருச்சி கல்லக்குடி, வேலூர் வல்லம், திருவண்ணாமலை இமைக்க ரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இதில் பரனூர், ஆத்தூர் உள்பட 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவை திரும்ப பெற்றது. 

இது குறித்த உத்தரவு அனைத்து திட்ட இயக்குனர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வருடந்தோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN tolls fee hike stop


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->