தமிழக பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! அதிகாரபூர்வ அறிவிப்பு!
TN School Quarterly Exam Leave 2023
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி முதல், அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை, மொத்தம் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல், அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை நடவடி மேற்கொண்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் (2023-24) இதனை அமல்படுத்தும் விதமாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்வை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதில், 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் பழைய நடைமுறையில்தான் இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
English Summary
TN School Quarterly Exam Leave 2023