டீசல் திருட தமிழக போலீஸ் உயர் அதிகாரி - இறக்கும் முன் காவலர் வெளியிட்ட ஆடியோ! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்யாத தவறுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதால், மனவேதனை அடைந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த காவலர் இறப்பிற்கு முன் வெளியிட்ட ஆடியோவில் பணிச்சுமை மற்றும் உயர் அதிகாரிகள் கொடுத்த தொந்தரவும் அம்பலமாகியுள்ளது.

கோட்டை காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தவர் காவலர் லோகேஷ். இவர் ராயபுரம் தம்புலேன் காவல் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த பல நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

இதனால் அவர் பிளாக் மார்க் செய்யப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காவலர் லோகேஷ் இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், வீட்டின் கழிவறையில் உயிரிழந்து கிடந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, காவலர்லோகேஷ் இறப்பதற்கு முன்னதாக துணை ஆணையருக்கு அனுப்பி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த ஆடியோவில், நான் எந்த தவறையும் செய்யவில்லை. என் உயர் அதிகாரிகள் (பெயர்களை குறிப்பிட்டுள்ளார்) தான் டீசல் திருட சொன்னார்கள்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

செய்தி உதவி நன்றி (தந்தி தொலைக்காட்சி) : https://www.thanthitv.com/latest-news/the-policeman-fainted-and-died-the-audio-of-his-speech-before-his-death-was-released-and-there-was-a-stir-166381


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn police mystery death some audio viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->