தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2 வரை நீட்டிப்பு -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன், தமிழக முதல்வர் ஆலோசனை கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து, தமிழக முதல்வர் ஆலோசனை செய்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த புதிய ஊரடங்கில், சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை தொடரும்
திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 200 பேருக்கு அனுமதி
தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதி
பொருட்காட்சிகளை நடத்த அனுமதி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN LOCKDOWN Extend march 2


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal