அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தரமாட்டோம் - தமிழ்நாடு தகவல் ஆணையம்!
TN Govt Staffs assets RTI info
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை பொதுமக்களிடம் வெளிப்படுத்த முடியாது என்று மாநில தகவல் ஆணையம் உருமாறிய முடிவை எடுத்துள்ளது.
இந்த விவகாரம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டத்தில் உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன் மற்றும் வருமான வரி விவரங்களைத் தெரிந்து கொள்ள சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்ததன் பிறகே தெரியவந்துள்ளது.
அந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர். ப்ரியக்குமார், தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதால் பொதுநலனுக்கு பயன்பாடில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், அந்த ஊழியரிடம் ஊழல் சந்தேகம் இருப்பின், உரிய விசாரணை அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பெயரில் தனிப்பட்ட விபரங்களை கோருவது ஏற்கக்கூடியதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
English Summary
TN Govt Staffs assets RTI info