சத்துணவு திட்டத்தில் அதிரடி மாற்றம்.?! தமிழக அரசின் புதிய திட்டம்.!!
tn govt new announcement
50 வருடங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடங்களில், மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் காலப்போக்கில் அது சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. சத்துணவில் தற்போது வரை மாணவர்களுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.
மேலும், முட்டையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்கலாமா? என தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.

கால்சியம் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். எனவே, காய்கறி, முட்டை இவற்றுடன் சேர்த்து ஒரு கப் பால் வழங்கலாம் என யோசித்து வருகின்றனர். ஏற்கனவே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து திட்டம் தீட்டினர்.
ஆனால், நடைமுறை சிக்கல் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது எனவே பால் பவுடரை உபயோகிக்கலாமா என யோசித்து வருகின்றனர். மேலும், இதில் கண்காணிப்பு மிக அவசியம் என தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
மேலும், இத்துடன் ஆப்பிள், வாழைப்பழம், பலாப்பழம், உள்ளிட்ட பழங்களை வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.