அனைவருக்கும் ரூ. 30,000 உதவித்தொகை? சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்தி; தமிழக அரசு எச்சரிக்கை!
TN GOVT Fake News about Central govt announce
டிஜிட்டல் யுகத்தில் வங்கி அதிகாரிகள் போலப் பேசி கடவுச்சொற்களைப் (Password) பறிப்பதும், போலி குறுஞ்செய்திகள் மூலம் வங்கிக் கணக்கைச் சூறையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதியதொரு மோசடி வலை விரிக்கப்பட்டுள்ளது.
பரவும் வதந்தி:
"மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ. 30,000 வழங்குகிறது. 2025-ம் ஆண்டு முடியப்போவதால், காலக்கெடு முடிவதற்குள் கீழே உள்ள லிங்கை அழுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை உண்மை என்று நம்பிப் பலரும் தங்கள் உறவினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர்.
இது ஒரு 'தூண்டில்' (Phishing) மோசடி:
இது தூண்டில் போட்டு மீனைப் பிடிப்பது போன்ற ஒரு வினையயேற்றமாகும். அந்தப் போலி லிங்கை நீங்கள் அழுத்தினால், சில நிமிடங்களில் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்பட வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் விளக்கம்:
இந்தத் தகவல் குறித்துத் தமிழக அரசின் சமூக ஊடகத் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check) அதிரடி விளக்கம் அளித்துள்ளது:
உண்மை நிலை: மத்திய அரசு இப்படி எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
எச்சரிக்கை: இது முற்றிலும் ஒரு போலியான செய்தி. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; மற்றவர்களுக்குப் பகிரவும் வேண்டாம்.
பொதுமக்கள் இதுபோன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் காணும்போது, அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்களில் சரிபார்த்துவிட்டுச் செயல்படுமாறு சைபர் கிரைம் போலீசாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
English Summary
TN GOVT Fake News about Central govt announce