அம்மோனியா வாயு கசிவு - பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. 

இதனால், பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும், அப்பகுதி மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், எண்ணூர் வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க இருப்பதாக முடிவு செய்துள்ளது.

இந்த இழப்பீடு தகவல் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு வெளியாகும் என்று சுற்றுசூழல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt compensation to ammonia gas affected peoples


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->