தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர வாய்ப்பு! பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி: ஆளுநர் ஒப்புதல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி (Environmental and Social Welfare Tax) விதிப்பதற்காகத் தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாவிற்குத் மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, 'தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டம், 2006'-ல் 'பிரிவு 3-ஏ' (Section 3-A) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, மதுபான விற்பனையின் மீது கூடுதல் வரி விதிக்க அதிகாரப்பூர்வமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, ஒரு மதுபான பாட்டிலுக்கு அதிகபட்சமாக ₹20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரியாக விதிக்கப்பட உள்ளது. வெவ்வேறு வகையான மதுபானங்கள் மற்றும் பாட்டில்களின் அளவுகளுக்கு ஏற்ப மாறுபட்ட வரி விகிதங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த மதுபான வகைகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும், இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மதுபானங்களின் விலை விரைவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய வரியின் மூலம் வசூலிக்கப்படும் நிதி, பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களை முறைப்படி மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் மீண்டும் பயன்படுத்துதல் போன்ற சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்தல், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கவும் இந்நிதி ஒதுக்கப்படுகிறது. அத்துடன், காடுகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்வாழ்வுப் பணிகளுக்கும் இத்தொகை முழுமையாகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Governor Approves Environmental and Social Welfare Tax on Liquor Bottles Prices Likely to Rise


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->