ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: வழக்கை முடிக்க முயன்ற காவல்துறை; 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிப்பு என அதிர்ச்சித் தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கின் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பென்-டிரைவ் ஆதாரத்தின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னை தேனாம்பேட்டையில் பிரத்யேகமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைச் சிறுமிகளுக்குப் பணம், செல்போன் மற்றும் ஆடம்பரப் பொருட்களை ஆசை காட்டி வீரமணி தொடர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இவரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கில் தேனாம்பேட்டை வீட்டை நிர்வகித்து வந்த உதவியாளர்கள் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிறுமிகளுடனான ரகசிய வீடியோக்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றிய கணேசன் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, 2025 அக்டோபர் 6-ஆம் தேதி பெறப்பட்ட புகாரின் பேரில், அக்டோபர் 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், வீடியோவில் இருப்பது தான் இல்லை என வீரமணி தரப்பில் மறுக்கப்பட்டதாலும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை மேலோட்டமாகவே முடித்துள்ளனர். 2019-ஆம் ஆண்டு பதிவான அந்த வீடியோவின் அடிப்படை டிஜிட்டல் ஆதாரம் இல்லை எனக் கூறி, மேற்கொண்டு வழக்கை நடத்த முகாந்திரம் இல்லை என கடந்த பிப்ரவரி 18, 2026 அன்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் மூடு அறிக்கை (Closure Report) சமர்ப்பித்தனர்.

எனினும், காவல்துறையினரின் இந்த அறிக்கையை ஏற்க மறுத்த போக்சோ நீதிமன்ற நீதிபதி, வழக்கை முடித்துவைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தீவிர விசாரணையைத் தொடர உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்தே, வழக்கின் உண்மைத்தன்மை, பாதிக்கப்பட்ட சிறுமிகள், வீரமணியை மிரட்டிப் பணம் பறித்த கும்பல் மற்றும் இக்கொடூரச் செயலில் தொடர்புடைய பிற தொழிலதிபர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. தற்போது தனிப்படை காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விரிவான விசாரணையின் முழுமையான அறிக்கை விரைவில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court Rejects Police Closure Report in Gem Granites POCSO Case Probe Reveals Over 100 Minor Victims


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->