11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 63 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை...! - போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் 63 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 11 வயது சிறுமி வசித்து வந்தார்.அப்போது செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலங்கரையான் மகன் முத்தையா (63) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் முத்தையாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி முருகன் நேற்று தீர்ப்பளித்தார்.

வழக்கில் முத்தையா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனை கருத்தில் கொண்டு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளியான முத்தையாவை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவலர்கள் மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

harassment 11 year old girl 63 year old man gets 20 years rigorous imprisonment POCSO court dramatic verdict


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->